விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
ஒரே ஒரு படம், நான்கு மொழிகளில் நான்கு ஹீரோக்கள். இப்படி எப்போதோ ஒரு முறைதான் இம்மாதிரியான அதிசயம் தென்னிந்தியத் திரையுலகில் நடக்கும். 2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மலையாளத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளிவந்த 'த்ரிஷ்யம்' படம் பல முந்தைய வரலாறுகளை முறியடித்து 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. வசூல் ரீதியாக மட்டுமல்லாமல், சிறந்த படமாகவும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்தினருக்கு எழும் ஒரு பிரச்சனையை அந்தக் குடும்பத்தின் தலைவன் எப்படி சமாளிக்கிறான் என்ற கதை தென்னிந்தியாவிற்குப் பொதுவான ஒன்று. அதனால்தான் இந்தப் படம் அதன் பின் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
கடைசியாக தமிழில் ரீமேக்காகி நாளை வெளியாக உள்ளது. மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் ரவிச்சந்திரன், தெலுங்கில் வெங்கடேஷ், தமிழில் கமல்ஹாசன் என அந்தந்த மொழிகளில் முக்கியமான சீனியர் நடிகர்கள் நடித்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என்பது உண்மை. ஆனாலும், எப்போதுமே ஒரிஜனல் ஒரிஜனல்தான் என்று சொல்வார்கள். அந்த வகையில் மோகன்லாலின் யதார்த்தமான நடிப்பை மற்ற நடிகர்கள் மிஞ்ச வாய்ப்பேயில்லை என்றுதான் ஒரிஜனல் மலையாள 'த்ரிஷ்யம்' படத்தைப் பார்த்தவர்கள் சொல்வார்கள். ஆனால், கமல்ஹாசன் தமிழில் நடிக்கிறார் என்ற போது அதற்கென தனி எதிர்பார்ப்பும் வந்தது. இருந்தாலும் கமல்ஹாசன் வைத்துள்ள ஒட்டு மீசை, வட தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகம் புரியாத நெல்லைத் தமிழ் ஆகியவை தமிழ்ப் படத்தில் வித்தியாசமாகவே பார்க்கப்படும்.
கமல்ஹாசனே தமிழில் நடித்தாலும் ஒரிஜனலைக் கெடுக்காமல் இருக்க வேண்டுமே என்றுதான் இப்போதைக்கு 'த்ரிஷ்யம்' மலையாளப் படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.