'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
என்னமோ ஏதோ படத்தில் நடித்த ராகுல் பிரீத்சிங்கை கோலிவுட் ஓரம் காட்டினாலும், தெலுங்கு பட உலகமான, டோலிவுட், வாடி ராசாத்தி என, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து வரவேற்றுள்ளது. தெலுங்கில் அரை டஜன் படங்களில் நடிக்கிறார். அத்தனை படங்களுமே, முன்னணி ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர்., ரவிதேஜா, அல்லு அர்ஜுன், ராம் சரண் ஆகியோரின் படங்கள் என்பது தான், இதில், ஹைலைட். ராகுல் வீட்டுக்கு கால்ஷீட் கேட்பதற்காக யார் சென்றாலும்,சாரி, மேடம் ரொம்ப பிசி என, பதில் வருகிறதாம். தெலுங்கில் தனக்கு ஏற்பட்டுள்ள திடீர் கிராக்கியை பார்த்து, கிர்...ரடித்து போயிருக்கிறது பொண்ணு. இதுதான் சமயம் என, லகரங்களில் வாங்கிய சம்பளத்தை ஒரேயடியாக கோடிகளுக்கு உயர்த்தியுள்ளாராம்.