அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தம்பியை சினிமாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கும் பேய் பட ஸ்பெஷலிஸ்ட் இயக்குனர், அவருக்கு ஜோடியாக நடிக்க பெரிய நடிகைகளை கேட்டு வருகிறார். தம்பியை அறிமுகப்படுத்தும்போதே பெரிய நடிகையுடன் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறாராம். அண்மையில் இரண்டு கோடி சம்பளம் என் படத்தில் ஹீரோயினாக நடிக்க சம்மதமா என்று வடநாட்டு இனிப்பு கடை நடிகையை அணுகினாராம். அவரும் பேய் ஸ்பெஷலிஸ்ட்தான் ஹீரோ என்று நினைத்து ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் தம்பிதான் ஹீரோ என்று தம்பியின் படத்தை மெயில் பண்ணினாராம் பேய் ஸ்பெஷலிஸ்ட். படத்தை பார்த்து விட்டு "சாரி... நான் ரொம்ப பிசி..." என்று அடுத்த நிமிடமே பதில் மெசேஜ் அனுப்பினாராம் நடிகை. தன் படத்தில் நடித்த டாப்பான நடிகை அல்லது மங்களகரமான ராய் நடிகையை தம்பிக்கு ஜோடியாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறராம்.