இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் யாஸ்ராஜ் பிலிம்ஸ் ஒன்று. தற்போது இந்த நிறுவனம் பல படங்களை தயாரித்து வருகிறது. அதில் முக்கியமானது சல்மான் கானின், சுல்தான் எனும் பிரமாண்ட படம். இப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதேப்போன்று எக்ஸல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தில் தயாரிப்பில், ஷாரூக்கான், ராயீஸ் படத்தில் நடிக்கிறார். ராகுல் தொலாக்கியா இயக்கும் இப்படத்தில் ஷாரூக்கான் கடத்தல்காரனாக நடிக்கிறார். அவரை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நவாசுதீன் சித்திக் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் வேளையில் ராயீஸ் படத்தின் டீசர் வருகிற ரம்ஜான் பண்டிகையில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதற்காக இயக்குநர் ராகுல் இரவு பகலாக டீசரை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த டீசரில் ஷாரூக்கானின் கேரக்டர் எந்தமாதிரியாக இருக்கபோகிறது என்ற எதிர்பார்ப்பு இப்பவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.