பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆண்டிற்கு 2 படங்களை வெளியிடவே, முன்னணி நடிகர் திணறிக்கொண்டிருக்க, பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம், இந்த ஆண்டில் மட்டும் 5 படங்கள் நடித்துவருவதோடு மட்டுமல்லாது, ஃபோர்ஸ் 2 படத்திற்கு இணைதயாரிப்பாளர் பணியையும் மேற்கொண்டுவருகிறார். ஜான் ஆபிரஹாம், இந்தாண்டில் மட்டும் வெல்கம் பேக், ராக்கி ஹேண்ட்சம், ஹேரா பெர்ரி 3, டிஷ்யூம் மற்றும் ஃபோர்ஸ் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விபுல் ஷாவின் இயக்கத்திலான ஃபோர்ஸ் 2 படத்தின் கதை, ஜான் ஆபிரஹாமிற்கு மிகவும் பிடித்திருந்ததால், இந்த படத்திற்கு இணைதயாரிப்பாளராகவும் செயல்பட திட்டமிட்டார். இதன்படி, ஜே.ஏ. எண்டர்டெய்ன்மெண்ட் பேனரின் இணை தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் முதல்வாரத்தில் துவங்க உள்ளது. படம், 2016ம் ஆண்டு பிற்பகுதியில் வெளியாக உள்ளது.