பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அழகர்சாமியின் குதிரை தொடங்கி கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, கயல் என ஏராளமான படங்களைத் தயாரித்தவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி. மதன். முன்னணி தயாரிப்பாளரான இவர், தனுஷ் தயாரித்த வேலையில்லா பட்டதாரி, காக்கிசட்டை ஆகிய படங்களை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்டார். இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைந்தன. தற்போது விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தைத் தயாரித்து வரும் பி.மதன் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தைத் தயாரிக்க திட்டமிட்டிருந்தார். இனி மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில்லை என்றும்.. தானே தயாரிப்பாளராகி படங்களை தயாரித்து நடிக்க இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் திடீர் முடிவு எடுத்ததினால் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பேனரில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படம் ட்ராப்பானது.