Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாரி டிரெய்லரைவிட வாலு டிரெய்லருக்கு வரவேற்பு குறைவு!

29 ஜூன், 2015 - 17:52 IST
எழுத்தின் அளவு:
Huge-response-to-Maari-trailer

தனுஷ் நடித்த மாரி படமும், சிம்பு நடித்த வாலு படமும் ஜூலை 17 அன்று ரிலீஸ் ஆவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.


தனுஷ், சிம்பு இருவரும் நண்பர்கள் என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், ஒருவரையொருவர் மிஞ்ச வேண்டும் என்ற தொழில்போட்டியும் வேகமும் இருவருக்குமே உண்டு. தற்போது இருவர் நடித்த படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் தன்னுடைய படம் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருவருமே இருக்கின்றனர். ரிலீஸ் தேதிக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் சிம்பு- தனுஷ் இருவருமே தங்கள் படங்களுக்கான புரமோஷனை முடுக்கிவிட்டுள்ளனர்.


இதற்கிடையில் மாரி படத்தின் டிரெய்லரை 4 நாட்களுக்கு முன் வெளியிட்டனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் அந்த டிரெய்லரை இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். சிம்பு நடித்த வாலு படத்தின் இரண்டாவது டிரெய்லர் இரண்டு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இரண்டு நாட்களில் வாலு டிரெய்லரை இதுவரை 5 லட்சம் பார்வையாளர்களே பார்த்துள்ளனர். மாரி டிரெய்லரைவிட வாலு டிரெய்லருக்கு வரவேற்பு குறைவாக இருப்பது கண்டு சிம்பு சற்றே அப்ஸெட்டாகிவிட்டாராம். மாரி படத்தின் டிரெய்லருக்குக் கிடைத்த ஹிட்ஸ் தனுஷை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in