விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் எம்.எஸ்.தோனி என்ற படம் உருவாக இருக்கிறது. தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி வெகுகாலங்கள் ஆனபோதும், படத்தின் ஷூட்டிங் இதுநாள் துவங்கப்படவில்லை. இதுப்பற்றி விசாரித்தபோது... கிரிக்கெட் வாழ்விலும் சரி, அவரது தனிப்பட்ட விஷயங்களிலும் சரி தோனியை பற்றி நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்ததாக படக்குழு கூறுகிறார்கள். மேலும் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். அதனால தற்போதைய கரண்ட் அப்டேட் வரை நிறைய தகவல்களை சேகரிப்பதால் படம் தாமதம் என்கிறார்கள். அதுமட்டுமின்றி தோனியுடன் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் சவுரவ் கங்குலி போன்றவர்களும் விளையாடியுள்ளதால் அவர்களை போன்றவைர்களை நடிக்க வைக்க சரியான நடிகர்களை தேடி வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பணிகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், ஜூலை மாதம் கண்டிப்பாக படம் துவங்கும் என்று தோனி டீம் தெரிவித்துள்ளது.