ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாஜி ஹீரோயின் மயிலு டைகர் படத்துல நடிக்கும்போது நடந்த விஷங்களைத்தான் இப்போ யூனிட் காரங்க கதை கதையா பேசிக்கிட்டிருக்காங்க. கில்லி நடிகர் சாதாரண லைட் பாயை கூட "வாங்கண்ணா.... நல்லா இருக்கீங்களாண்ணா..." என்று தான் பேசுவாராம்... ஆனால் மயிலோ ஆங்கிலத்தில், அதிகார தோரணையில்தான் பேசுவாராம். ஏதாவது சின்ன குறை என்றாலும் தாட்பூட் என்று ஆங்கிலத்தில் பேசி குதிப்பாராம். படப்பிடிப்புக்கு வரும்போது வயசு பிள்ளைங்க மாதிரி குட்டை பாவாடை அல்லது ஆஃப் டவுசர் போட்டுதான் வருவாராம். அவர் மேக்அப்புக்கு 3 மணிநேரமாகுமாம். எப்போ மேக்ரூமை திறந்து வருவார்னு யூனிட்டே காத்து கிடக்குமாம். திடீர்னு படப்பிடிப்புக்கு மகள்கள் வந்தால் கேரவனுக்குள் மகள்களுடன் ரொம்ப நேரம் விளையாடிக் கொண்டிருப்பாராம். அவர் வரும்வரை மொத்த யூனிட்டும் வெயிட் பண்ணுமாம். ஒரு நாள் யூனிட்டில் உள்ள ஒருவர் மகள்களை செல்போனில் யதேச்சையாக படம் எடுத்து விட அதை பார்த்துவிட்ட மயிலு. அவரை யூனிட்டிலிருந்து விரட்டியே ஆக வேண்டும் என்று அடம்பிடித்து விரட்டிவிட்டாராம். படத்தில் நடிக்கும் மற்ற இரண்டு நடிகைகளை விட மயிலுக்குத்தான் அதிக சம்பளமாம். ஒரு காலத்துல எவ்வளவு சிம்பிளா இருந்தவர் இப்போ என்னாச்சு என்று ஆச்யர்யப்படுறாங்க அந்தக் காலத்து புரொடக்ஷன் மானேஜர்கள்.