பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
டான், டான்-2 போன்ற ஆக்ஷ்ன் படங்களை இயக்கியவர் பர்கான் அக்தர். இவர் முதன்முறையாக ஹீரோவாக நடித்த படம் ''பாக் மில்கா பாக்''. தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து வௌிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது பர்கான், விது வினோத் தயாரிப்பில், ''வசீர்'' என்ற படத்தில் ஏடிஎஸ் போலீஸாக நடித்து வருகிறார். அதுமுட்டுமின்றி முதன்முறையாக ஆக்ஷ்ன் வேடம் ஏற்று நடித்து வருகிறார் பர்கான். படத்தில் பர்கான் ஆக்ஷ்ன் ரோல் பண்ணுவதால் முதன்முறையாக துப்பாக்கி ஏந்தி நடிக்க இருக்கிறார். ஆனால் இதுவரை அப்படியொரு ரோலில் பர்கான் நடிக்கவில்லை என்பதால் முறையாக ஒருவரிடம் பயிற்சி பெற்று நடித்து வருகிறார் பர்கான்.
இதுகுறித்து இப்படத்தை இயக்கும் பிஜய் நம்பியார் கூறுகையில், பர்கான் துப்பாக்கி ஏந்தி திரையில் தோன்றியபோது செயற்கை தன்மையின்றி ரியலாக இருந்தது. இதுமாதிரியான ரோலுக்கு இவர் தான் மிகப் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார்.
வசீர் படம் டிசம்பர் மாதம் வௌியாக இருக்கிறது.