ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இளம் இயக்குநர் அட்லீ இயக்க உள்ள புதிய படத்தில், விஜய், அப்பா கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெளதம் மேனன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில், அஜித், அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது. இதனிடையே, அட்லீ நடிக்க உள்ள விஜய் 59 படத்தில், விஜய் அப்பா கேரக்டரில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "புலி" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது நிறைவடைந்தவுடன், குடும்பத்தினருடன் வெளிநாடு செல்ல விஜய் திட்டமிட்டுள்ளார்.
பின்னர் அட்லீ இயக்கத்தில், விஜய் 59 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தில், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் முன்னணி கேரக்டர்களில் நடிக்க உள்ளனர்.