'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மாதவன்-கங்கனா நடிப்பில் வௌியான படம் தனு வெட்ஸ் மானு. இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதனைத்தொடர்ந்து தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் என அதன் இரண்டாம் பாகம் கடந்தவாரம் வௌியானது. இந்தப்படமும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சானை படைத்து கொண்டிருக்கிறது. விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் சேர இருக்கிறது.
இந்நிலையில் ஆனந்த், தனு வெட்ஸ் மானு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், அதில் ஹீரோவாக மாதவனுக்கு பதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், தற்போது தகவல் வௌியாகியுள்ளது. அதேசமயம் ஹீரோயினாக கங்கனாவே தொடர்வார் என்கிறார்கள். தனுஷ் முதன்முதலில் இந்தியில் அறிமுகமானது ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா படத்தில் தான். முதல்படமே தனுஷூக்கு இந்தியில் ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது. தொடர்ந்து ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சன் உடன் நடித்தார். தற்போது தமிழ் படங்களில் நடித்து வரும் தனுஷ், விரைவில் இந்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அது தனு வெட்ஸ் மானு-3 ஆக இருக்கலாம் என்கிறார்கள்.