'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஆண்டு விஜயதசமியின் போது பிரின்ஸ் மகேஷ் பாபு படமும், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் படமும் மோதியது. அதாவது மகேஷ் பாபு நடித்த ஆகடுவும், ராம் சரண் நடித்த கோவிந்துடு அந்தரிவாடேலே படமும் ஒன்றாக ரிலீஸ் ஆனது நினைவிருக்கலாம். முன்னதாக ராம் சரணின் நாயக்கும் மகேஷ் பாபுவின் சீதம்மா வாகிட்லோ சிரிமல்லேசெட்டுவும் மற்றும் ராம் சரணின் எவடு-பிரின்சின் 1-நேநோக்கடினே போன்ற படங்களும் சங்கராந்தி சீசனில் மோதியது. இந்நிலையில் இந்த தசரா சீசனில் ராம் சரணும், அகில் அக்கினேனியும் மோத இருக்கிறார்களாம். அதாவது ராம் சரண் தற்போது நடித்து வரும் புருஸ்லீ படத்தை வரும் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அகில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் படத்தையும் தசரா சீசனில் வெளியிட முடிவு செய்ததாக தெரிகிறது. இந்த இரண்டு படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.