தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகவிருக்கும் கபார் சிங் 2 படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முதல் துவங்கியுள்ளன. நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் பாபி இயக்கி வருகின்றார். இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அனிஷா அம்ரோஸ் நடிக்க உள்ளார். புனேவில் துவங்கிய இப்படத்தின் முதல்கட்ட படபிடிப்புகள் தொடர்ந்து ஜூன் ஜூன் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இப்படத்தில் வில்லன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகளில் பவன் கல்யாண் கலந்து கொள்ளவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கவுள்ளார். கபார் சிங் 2 படம் 2016 சங்கராந்தி பண்டிகைக்கு வெளிவரும் என்று கூறப்படுகின்றது.