மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டோலிவுடின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார்.இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டிரைலர், மகேஷ் பாபுவின் தந்தையும் மூத்த நடிகருமான கிருஷ்ணாவின் பிறந்த தினமான மே 31 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக் குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஸ்ரீமந்துடு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நேற்று டுவிட்டரில் வெளியிட்டனர். மிகவும் ஸ்டைலாக சைக்கிள் ஓட்டிவரும் மகேஷ் பாபுவின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இணையத்தில் தீயாக பரவ துவங்கிய ஸ்ரீமந்துடு பஸ்ட் லுக் போஸ்டரை மகேஷ் பாபு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மைத்திரி மூவிஸ் பட நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றது.