இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய இரண்டு பிரம்மாண்டமான படங்கள் வெளிவந்ததும் அனுஷ்காவின் மார்க்கெட் நிலவரம் இன்னும் கூடிவிடும். ஆனால், அதற்குள் தன்னுடைய எடையை அனுஷ்கா கூட்டியிருக்கிறாராம். நாயகர்கள் மட்டுமே செய்யும் எடையைக் கூட்டுவது, குறைப்பது போன்ற விஷயத்தை அனுஷ்கா செய்திருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறதாம் திரையுலக வட்டாரம். 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காகத்தான் தன்னுடைய உடல் எடையை சுமார் 15 கிலோ வரை அனுஷ்கா கூட்டியிருக்கிறாராம்.
தெலுங்கில் 'சைஸ் ஜீரோ' என்று பெயர் வைத்திருப்பதன் மூலுமே இந்தப் படத்தின் கதையைப் பற்றி யூகித்துக் கொள்ளலாம். மாடலிங்கில் இருப்பவர்கள் அவர்களது உடல் எடையை 'சைஸ் ஜீரோ'வாக மாற்றுவதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைப் பற்றி கமர்ஷியலாகச் சொல்ல வரும் படம்தான் இது. ஆர்யா, நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் பிரகாஷ் கொவேலமுடி இயக்கி வருகிறார். 'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.