தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இரவு 10 மணிக்கு மேல் டி.வி.பார்ப்பவர்களுக்கு கிரிஜா ஸ்ரீயை தெரியாமல் இருக்க முடியாது. சமையல் மாந்திரீகம், உங்கள் நண்பன் போன்ற பாலியல் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர். எந்த ஒளிவுமறைவும் இல்லாத கிரிஜாவின் பேச்சுகள் இணைய தளங்களில் வைரலாக பரவிக் கிடக்கிறது. கிரிஜாவிற்கும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் உள்ளது.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: பாலியல் நிகழ்ச்சி மூலம் எனக்கு கிடைத்த புகழை விட விமர்சனங்கள்தான் அதிகம். அதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னை பெற்ற தாயே என் நிகழ்ச்சியை ஊக்கப்படுத்தும்போது மற்றவர்களின் விமர்சனங்களை நான் ஏன் பெரிதுபடுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சி மூலம் பல தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். பல இளைஞர்கள் தவறான பாதையிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். இது ஒரு மருத்துவ நிகழ்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சியும் வரும் உரையாடல்களை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு விமர்சிக்க கூடாது.சில சினிமா வாய்ப்புகள் வந்தது அப்போது ஒப்புக் கொள்வதில் தயக்கம் இருந்தது. இப்போது அதற்கும் என்னை தயார்படுத்திக் கொண்டேன். நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன். என்கிறார் கிரிஜா ஸ்ரீ.