இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படம் இது நம்ம ஆளு. சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடித்த படம். இந்த ஒரு காரணத்திற்காகவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. ஆனால் பல்வேறு பிரச்னைகளால் இப்படம் இன்னும் முடிந்தபாடில்லை, இதனால் இப்படத்தை அப்படியே போட்டுவிட்டு ஹைக்கூ என்ற படத்தை இயக்கினார் பாண்டிராஜ். முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகை அமலாபால் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் டீசரை வௌியிடப்பட்டுள்ளது. அதில் முழுக்க முழுக்க சின்னசிறு குழந்தைகளின் கொண்டாட்டமாக அந்த டீசரை உருவாக்கியுள்ளனர். டீசர் முடிவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக நடிகர் சூர்யா தோன்றுகிறார். டைனோசர் போன்று மிமிக்கிரி செய்தபடி குழந்தைகளுடன் குழந்தையாய் அவர் விளையாடி மகிழ்கிறார். 1.13 நிமிடம் ஓடும் இந்த டீசரில் குழந்தைகளின் யதார்த்தங்களை அவ்வளவு அழகாக படம்பிடித்திருக்கிறார்கள். டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலர் டீசர் சிறப்பாக இருப்பதாக டுவிட்டரில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
ஹைக்கூ படத்தை சூர்யாவும், பாண்டிராஜூம் இணைந்து தயாரித்துள்ளனர்.