விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
ரஞ்சி பணிக்கர்.. மலையாள ஆக்சன் பிரியர்கள் ஆராதிக்கும் ஒரு பெயர். அதற்கு காரணமும் உண்டு. பிரபல கதாசிரியரும், இயக்குனரும், தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டவருமான ரஞ்சி பணிக்கர் நடிகராகிய பின், நடிக்கும் படங்களில் அவருக்கு கிடைக்கும் கேரக்டர்கள் எல்லாம் பெரும்பாலும் காமெடியானவை தான். 'என்னும் எப்பொழும்', 'ஓம் சாந்தி ஒசானா' ஆகிய படங்களில் அவரது கேரக்டரில் ஹ்யூமர் சென்ஸ் நன்றாக வெளிப்பட்டிருக்கும்..
ஆனால் இதற்கும் துளியும் சம்பந்தமில்லாமல் தான் இவர் உருவாக்கும் கதைகள் இருக்கும். ஒரு கதாசிரியராக ஆக்சன் கதைகளை உருவாக்குவதற்கென்றே அவதாரம் எடுத்தவர் போல, தனது கதைகளால் மலையாள திரையுலகில் சூப்பர்ஹிட் வெற்றிகளை அள்ளியவர் தான் ரஞ்சி பணிக்கர். ஆனால் தன்னால் காமெடியாக நடிக்க முடியுமோ என்னவோ, ஆனால் காமெடி கதைகளை உருவாக்க முடியும் என தோன்றவில்லை” என்கிறார்.