தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
ஒரு ஹீரோவோ அல்லது ஹீரோயினோ நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகும் நிகழ்வுகள் அபூர்வமாக எப்போதாவது நிகழ்வதுண்டு.. கடந்த வருடம் லட்சுமி மேனன் நடித்த ஜிகர்தண்டா, அவதாரம் (மலையாளம்) படங்கள் ஒரே நாளில் வெளியானவைதான். ஏன், கடந்த மாதம் நித்யா மேனன் நடித்த 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'காஞ்சனா-2' ஆகிய படங்களும் ஒரே நாளில் வெளியானவை தான். ஆனால் பொதுவாக ஹீரோக்கள் தங்களது படங்களை ஒரே நாளில் வெளியிட ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.
காரணம் இரண்டு படங்களுக்கும், ரசிகர்கள் கூட்டங்கள் பிரிவதால் ஏற்படும் வசூல் இழப்பு, ஒன்று சரியாக இல்லாவிட்டால் அது மற்றொரு படத்தையும் பாதிக்கும் அபாயம் இதெல்லாம் கூட காரணங்கள் தான். ஆனால் நாளை நிவின்பாலி நடித்துள்ள 'பிரேமம்' மற்றும் 'இவிடே' ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன. இதில் 'இவிடே' படத்தில் பிருத்விராஜ் தான் ஹீரோ என்பதால், அது அவர் கணக்கில் சேர்ந்துவிடும். இதில் நிவின்பாலி வித்தியாசமான வில்லனாக நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் 'பிரேமம்' படத்தில் நிவின்பாலி சோலோ ஹீரோ தான். நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தான் இதையும் இயக்கியுள்ளார். நிவின் பாலியின் படங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடுவதால் தான் இந்த இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய முடிவுசெய்துள்ளார்கள். ஆனால் இது நிவின்பாலிக்கு ரிஸ்க்காக அமையுமா, அல்லது ஜாக்பாட்டாக அமையுமா என்பது நாளை தெரிந்துவிடும்.