'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்தும் மலையாளத்தில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகர் தான். தமிழில் சர்வம்' என்கிற படத்தில் மட்டும் நடித்துள்ளார்.. இவர்கள் இருவருமே முன்னாள் நடிகர் சுகுமாரனின் மகன்கள் தான். இந்திரஜித்தின் மனைவி பூர்ணிமாவும் ஒரு நடிகை தான். 'காதலுக்கு மரியாதை' படத்தில் ஷாலினியின் தோழியாக கூடவே வருவாரே அவர்தான் இவர். இன்னும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் திருமணத்திற்குப்பின் கொஞ்சகாலம் நடிப்பை விட்டு ஒதுங்கியவர் தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.. ஆனால் சினிமாவில் இல்லை.. சின்னத்திரையில். 'உக்ரம் உஜ்வலம்' என்கிற ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜ் ஆக பொறுப்பேற்று இருக்கும் பூர்ணிமா, இந்த ஷோவில் டான்ஸ் மட்டும் இல்லாமல் கராத்தே, த்ரில்லிங் விளையாட்டு என அப்ள அம்சங்கள் இருப்பதால் வழக்கமான ரியாலிட்டி ஷோ போல இல்லாமல் உற்சாகமாக இருப்பதாக சொல்கிறார்.