விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2006ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி வெளிவந்த படம் 'புதுப்பேட்டை'. இந்தப் படத்தில் 'கொக்கி குமார்' என்ற ரவுடி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார். படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் 'ரவுடியிசம்' சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான படம் என்ற பெயரை இந்தப் படம் பெற்றது. செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் 'காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி” ஆகிய படங்களுக்குப் பிறகு அவருக்கு பெயரை வாங்கித் தந்த படம் இது.
சாதாரண பள்ளி மாணவனாக இருந்து ஒரு பெரிய ரவுடியாக தனுஷ் உருவெடுக்கும் கதைதான் இந்தப் படம். மிக இளவயதில் தனுஷ் இப்படிப்பட்ட ஒரு கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது தவறு என்று அப்போது பலத்த விமர்சனம் எழுந்த்து. இருந்தாலும் இந்தப் படத்தின் கதாபாத்திரமான 'கொக்கி குமார்' இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. அதனால்தான் சமீபத்தில் வெளிவந்த 'வை ராஜா வை' படத்தில் கூட 'கொக்கி குமார்' கதாபாத்திரம் மூலம் கிளைமாக்சில் தனுஷ் என்ட்ரி கொடுத்தார்.
தன் படத்தைப் பற்றியும், தன்னைப் பற்றியும் அடிக்கடி ஏதாவது டிவீட் செய்து கொண்டிருக்கும் தனுஷ், இந்த 'கொக்கி குமார்' படத்து வருடம் நிறைவு செய்ததைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. மே 26 அன்று அவருடைய புதுப்படத்தைப் பற்றித்தான் சொன்னாரே தவிர 'கொக்கி குமார்' பற்றி சொல்ல மறந்து விட்டார்.