அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
யாரது... அஞ்சலியை மிகவும் குண்டாகி விட்டார் என்று சொன்னது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் அவர்கள் அப்படி சொன்னது தவறு என்று சொல்லி விடுவார்கள். சில நிமிடங்களுக்கு முன் அஞ்சலி அவருடைய புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழில் அடுத்தடுத்து அவர் எதிர்பாராமலேயே புதிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'இறைவி' படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டதும், கார்த்திக் அஞ்சலியை கண்டிப்பாக இளைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். உடனே கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட அஞ்சலி உடலை இளைத்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், அஞ்சலி எந்த அளவிற்கு இளைத்துப் போயுள்ளார் என்று யாருக்கும் தெரியாமலே இருந்தது. தன்னுடைய புதிய தோற்றத்தை வெளியிடுவதன் மூலம் மேலும் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம் என்ற எண்ணத்தில் சற்று முன்னர் அந்த புகைப்படத்தை அஞ்சலி வெளியிட்டுள்ளார். இப்போதுதான் மும்பையிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய மும்பை நடிகை போன்ற தோற்றத்தில் அந்தப் புகைப்படத்தில் அஞ்சலி தோற்றமளிக்கிறார்.
ஆக, இனி அஞ்சலிக்கு புதிய வாய்ப்புகள் குவியப் போவது நிச்சயம்...!