பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூர்யாவின் தெலுங்கு மொழிமாற்ற படங்கள் டோலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் திகில் கதைக் களத்தில் பேயாக சூர்யா நடித்திருக்கும் மாசு என்கிற மாசிலாமணி படம் ரக்ஷசுடு என்ற பெயரில் தெலுங்கில் திரைக்கு வருகின்றது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா இரு வேடங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வரும் 29 தேதி திரைக்கு வருகின்றது. தமிழகத்தில் பெரும்பான்மையான திரையரங்குகளில் வெளிவரும் இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக திரையரங்குகளில் வெளிவருகின்றது. இப்படத்திற்கு போட்டியாக நடிகர் ராம் நடித்துள்ள பண்டக சீஸ்கோ படம் டோலிவுட்டில் 29 ஆம் தேதி திரைக்கு வந்தாலும் டோலிவுட் ரசிகர்கள் ரக்ஷசுடு படத்தை பெரிதும் எதிர்பார்க்கின்றனர் என்று கூறப்படுகின்றது.