தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன், சச்சின், வில்லு உள்பட பல படங்களில் முக்கிய காமெடியனாக நடித்தவர் வடிவேலு. அப்படி அவர்கள் இணைந்து நடித்த படங்களில் காமெடி பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. ஆனால், சமீபகாலமாக காமெடியனாக நடிப்பதில்லை என்று கூறி வந்த வடிவேலு, தெனாலிராமன் படத்தை அடுத்து எலி படத்தில் தற்போது நடித்திருப்பவர், சமீபத்தில் அப்படத்தின் பிரஸ்மீட் நடந்தபோது, வெயிட்டான காமெடியன் ரோல் கிடைத்தால் ஹீரோவாக நடித்துக்கொண்டே காமெடியனாகவும் நடிப்பேன் என்று கூறினார்.
அதையடுத்து, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் படம் முழுக்க விஜய்யுடன் வருவது போன்ற காமெடியனாக நடிக்க வடிவேலுவை அழைத்தார்களாம். ஆனால், அப்படி நடிப்பதற்கு வடிவேலு கேட்ட சம்பளம் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்ததாம். தனது மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது கேட்டதை விடவும் அதிகமாக கேட்டாராம் வடிவேலு. அதனால் வடிவேலுவே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டவர்கள், விஜய்யுடன் காமெடியனாக நடிக்க வேறு சில நடிகர்களிடம் பேசி வருகின்றனர்.
ஏற்கனவே ரஜினி நடித்த லிங்கா படத்தில் நடிப்பதற்கும் வடிவேலு பெரிய சம்பளம் கேட்டதால்தான் அவருக்கு பதிலாக அந்த படத்தில் சந்தானத்தை நடிக்க வைத்தனர் என்று ஒரு செய்தி வௌியானது குறிப்பித்தக்கது.