வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்த முதல் படம் பென்சில். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்தார். பள்ளி பசங்களைப்பற்றிய கதையில் உருவான அப்படம் இப்போதுவரை வெளியாகவில்லை. அதுபற்றி விசாரித்தால், எதுவும் சொல்ல மறுக்கிறார்கள்.
ஆனால், அதையடுத்து அவர் நாயகனாக நடித்த டார்லிங் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. அப்படம் வெற்றியும் பெற்றது. ஆனால், அப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு பேசப்படவில்லை. அவர் இன்னும் நிறைய நடிக்க வேண்டும் என்று தான் விமர்சனங்கள் வெளியாகின.
அதனால், தனது 3வது படமான த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் தனக்குள் இருக்கும் நடிகனை நூறு சதவிகிதம் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த ஜி.வி.பிரகாஷ்குமார், படத்தின் ஸ்கிரிப்டை கையில் வைத்துக்கொண்டு தீவிரமான ரிகர்சல் எடுத்த பின்னரே கேமரா முன்பு வந்து நின்றாராம்.
அப்படி அவர் நடித்த பல காட்சிகளுக்கு ஸ்பாட்டிலேயே கைதட்டல் கிடைத்ததாம். அதனால் அடுத்தடுத்த காட்சிகளில் புதிய எனர்ஜியுடன் நடித்தாராம் ஜி.வி.பிரகாஷ். இந்த நிலையில், சமீபத்தில் அப்படத்தின் டீசர் வெளியானதை அடுத்து அவரது நடிப்பு பலரும் பாராட்டி வருகின்றனர். சில முன்னணி ஹீரோக்களே முதல் படத்தை விட இந்த படத்தில் நீங்கள் கடினமாக உழைத்திருப்பது டீசரிலேயே தெரிகிறது என்று சொல்லி அவரை தட்டிக்கொடுத்து வருகிறார்களாம். அதனால் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார் ஜி.வி.பிரகாஷ்.