Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானத்துக்கு விட்டுக்கொடுத்த ஆர்யா!

27 மே, 2015 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Arya-gave-romantic-scene-for-Santhanam

காதல் கதைகளில் மட்டுமே அதிகமாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆர்யாவுக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்து வந்தன. அப்போதுதான் காதலோடு காமெடியும் கலந்து நடிக்கும் பாஸ் என்ற பாஸ்கரன் கதையில் அவரை நடிக்க வைத்தார் ராஜேஷ்.எம் அப்படம் ஆர்யாவுக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. அதற்கு சந்தானமும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். அதனால்தான் அதன்பிறகு தான் நடித்த பல படங்களில் சந்தானத்தையும் கூட்டு சேர்த்துக்கொண்டு நடித்து வெற்றிக்கனிகளை பறித்து வந்தார் ஆர்யா.


அதன்காரணமாகவே ஆர்யா-சந்தானத்திற்கிடையிலான நட்பும் இறுக்கமாகி விட்டது. அதனால் தற்போது மீண்டும் ராஜேஷ்.எம்மின் இயக்கத்தில் தான் நடித்து வரும் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்திலும் சந்தானத்துடன் நடித்து வரும் ஆர்யா, முந்தைய படங்களில் காமெடி காட்சிகளில் அவரை பேச வைத்து தான் வேடிக்கை பார்த்து வந்தவர், இந்த படத்தில் காதல் காட்சிகளிலும்கூட அவரை நடிக்க வைத்து தான் வேடிக்கை பார்த்திருக்கிறாராம்.


அந்த வகையில், இதுவரை தான் காமெடியனாக நடித்த படங்களில் ஹீரோயினிகளை கலாய்ப்பதோடு நிறுத்தி வந்த சந்தானம், இந்த படத்தில் தமன்னாவுடன் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்து கலக்கியிருக்கிறாராம். ஆனால் ஏதாவது ஒரு வகையில் நடிகைகளை கலாய்க்க வேண்டும் என்கிற கொள்கையுடன் இருக்கும் சந்தானம், இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பெரும்பாலான நேரங்களில் தமன்னாவை கலாய்ப்பதிலேயே பொழுதை கழித்துக்கொண்டிருந்தாராம். ஆனால் தான் நீண்டகாலமாக செய்து வந்த கலாய்ப்பு வேலை இப்போது ஆர்யாவுக்கு அலுத்து விட்டதால், இந்த விசயத்தில் அவர் சந்தானத்துடன் போட்டிபோடாமல் அவருக்கு விட்டுக்கொடுத்து விட்டாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in