ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் வௌியான வித்தியாசமான படம் பிகே. ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் வௌியான இப்படம் இந்தியாவில் வசூல் சாதனை புரிந்தது. இந்திய படங்களிலேயே இதுவரை அதிகளவு வசூலித்த படமாக பிகே திகழ்கிறது. இப்போது வசூலில் மற்றுமொரு சாதனையும் படைத்திருக்கிறது. இந்தியா தவிர்த்து பாலிவுட் படங்களுக்கு அதிக மவுஸ் இருப்பது சீனாவில் தான். கடந்தவாரம், சீனாவில் வௌியான பிகே படம் இந்தியாவை காட்டிலும் சீனாவில் அதிக தியேட்டரில் ரிலீஸானது. சீன மக்கள் இடத்திலும் பிகே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒருவாரத்தில் மட்டும் 5.31 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.33.76 கோடி வசூலித்துள்ளது. முதன்முறையாக இந்திய படம் இவ்வளவு வசூல் செய்திருப்பது இதுவே முதன்முறையாகும்.