தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல மலையாள இயக்குனர் கமல் இயக்கத்தில் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் நடிக்கிறார் மெகாஸ்டார் மம்முட்டி. இந்தப்படத்திற்கு 'உடோப்பியாயிலே ராஜாவு' என பெயர் வைத்துள்ளார்கள். இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்பவர் ஜுவல் மேரி.. கேரள சேனல் ஒன்றில் சின்னத்திரை தொகுப்பாளராக, ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் பங்குபெற்ற நடனக்கலைஞராக வலம் வந்த இவர் தான் மம்முட்டி தற்போது நடித்துவரும் 'பாதமாறி' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் 'உடோப்பியாயிலே ராஜாவு' படத்தின் துவக்க விழா பூஜை கொச்சியில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மம்முட்டி எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெள்ளை வேட்டி சட்டையில் சிம்பிளாக வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வசதியற்ற பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்களுக்கு உதவும் விதமாக, பலருக்கு தனது சொந்தப்பணத்தில் இருந்து தையல் மிஷின்களை வழங்கினார் மம்முட்டி. இந்த நிகழ்வின்போது சமீபத்தில் திருமணமான கமலின் மகன் ஜென்யூஸ் முகமுதுவும் அவரது புது மனைவி ஷல்பாவும் கலந்துகொண்டனர்.