'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சமந்தா திரையில்தான் ஓரளவு உடல்கட்டு இருப்பது போன்று தெரிவார். ஆனால் நேரில் பார்த்தால் ரொம்பவே ஒல்லிக்குச்சியாக இருக்கிறார். ஆனால் இன்னும் உடம்பு பெருத்தால் திரையில் ரொம்ப குண்டாக தெரிவாராம். அதன்காரணமாகவே வெயிட் போடும் எந்த உணவுகளையும் அவர் எடுத்துக்கொள்வதில்லையாம்.
அதேசமயம், அஞ்சான், கத்தி படங்களில் நடித்தபோது தெலுங்கு படங்களில் நடித்தபோது இருந்த மாதிரியே உடம்பை வைத்திருந்தவர் இப்போது வேலையில்லா பட்டதாரி 2-ம் பாகத்திற்காக சற்று எடை போட்டிருக்கிறார் சமந்தா.
காரணம், இந்த படத்தில் அவர் தனுஷின் மனைவியாக நடிக்கிறார். குடும்ப பெண் என்பதால் இந்த கதாபாத்திரத்திற்காக புடவை கெட்டப்பில் நடித்து வரும் சமந்தா, சற்று உடம்பு இருந்தால்தான் புடவையில் அழகாக தெரிவோம் என்பதற்காக வழக்கத்தை விட எக்ஸ்ட்ராவாக சில உணவுகளை எடுத்துக்கொண்டு தற்போது பூசினாற் போன்று வெயிட் போட்டிருக்கிறார். ஆனால் இதையே தொடர மாட்டாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தனது வழக்கமான ஒல்லிக்குச்சி கெட்டப்புக்கு மாறி விடுவாராம் சமந்தா.