ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் |
''கற்றது தமிழ்'' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராம், ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு இயக்கிய படம் ''தங்க மீன்கள்''. கடந்தாண்டு இப்படம் தேசிய விருது பெற்றது. இந்நிலையில் தங்கமீன்கள் படத்திற்கு பிறகு ''தரமணி'' என்ற படத்தை துவக்கினார் ராம். ஐடி துறையில் நடக்கும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. புதுமுகம் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்க, ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார். இதுவரை இப்படம் தொடர்பாக ஒரே ஒரு ஸ்டில் மட்டுமே வௌியாகியுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்புகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 7 நாட்கள் மட்டுமே தரமணி படத்தின் ஷூட்டிங் பாக்கி உள்ளதாம். இந்த 7 நாட்கள் படப்பிடிப்பு நாகர்கோவில் அருகே நடைபெற இருக்கிறது. அங்கு படப்பிடிப்புகள் முடிந்தவுடன் போஸ்ட் புரொடாக்ஷன்ஸ் வேலைகள் துவங்குகின்றன. விரைவில் படத்தின் இசையையும், அதனைத்தொடர்ந்து, படமும் ரிலீஸாக இருக்கிறது.
தரமணி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜே.எஸ்.கே.பிலிம் கார்பரேஷன் சார்பில் சதீஷ் தயாரிக்கிறார்.