டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டின் ஜாம்பாவானான தாசரி நாராயண ராவ் தற்போது பவர் ஸ்டார் பவன் கல்யாணை வைத்து தயாரிக்கும் புது படத்தை வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த படத்தை கோபால கோபால புகழ் இயக்குனர் கிஷோர் பர்தசனி தான் இயக்குகிறார் என்று தகவல் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அந்த படத்தின் பெயர் கல்கி என்றும் அது தொடர்பாக ஒரு போஸ்டரும் இன்டர்நெட்டில் வெளிவந்துள்ளது. இந்த போஸ்டரை பவர் ஸ்டாரின் ரசிகர்கள் வெளிவிட்டு உள்ளார்களா அல்லது அந்த படக்குழுவினரே உலவ விட்டு இருக்கின்றனரா என்பது தெரியவில்லை. எனினும் அந்த போஸ்டரில் பவன் கல்யாண் தாடியோடும், கிளீன் ஷேவிலும் இருப்பதால், அவரின் தாடி ரகசியம் இந்த கல்கி படத்திற்காகத்தான் என்று பேசப்படுகின்றது. மேலும் அந்த போஸ்டரில் படத்தை பிரபல இயக்குனர் முருகதாஸ் இயக்குவதாகவும், தேவி ஸ்ரீ பிரசாத்தும், அனூப் ருபென்சும் இணைந்து இசை அமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது . ஏற்கனவே மெகா ஸ்டார் சிரஞ்சீவி ரக்த சிந்தூரம் என்ற படத்தில் கிட்டத்தட்ட கல்கி பகவான் போன்ற வேடமான கன்றகொட்டலியாக நடித்து இருந்தார். விரைவில் பவன் கல்யாண் இந்த படத்தை பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.