'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 60வது பிறந்த நாளையொட்டி ராஷ்டிரா சிரஞ்சீவி யுவதா அமைப்பினர் ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கூடிய விழாவாக வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதாவது அவரது சஷ்டியப்ப பூர்த்தியையும் சேர்த்து ஐதராபாத்தில் உள்ள கச்சி பௌலி
ஸ்டேடியத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதியை மெகா ஸ்டார் பேன்ஸ் டே என்று கொண்டாட உள்ளனர். இதுவரையில் சிரஞ்சீவி அறக்கட்டளை மூலம் அவரது ரசிகர்களில் 15 லட்சம் பேர் இரத்த தானமும், 3 ஆயிரம் பேர் கண் தானமும் செய்துள்ளனர். இயற்கை பேரழிவுகளின் போதும் பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்சா, பாட்மிண்டன் ஸ்டார் சைனா நேவால், கிரிக்கெட் வீரர் அம்படி திருப்தி ராயுடு மற்றும் அங்குள்ள மேல்சபை ஆசிரியரான ராமு சூர்யராவ் போன்றவர்களுக்கு சிரஞ்சீவி மரியாதை செலுத்துகிறார். அதிகமுறை மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்ட அவரது ரசிகர்களுக்கு தங்க மெடல் கொடுத்து மரியாதை செலுத்துகிறார். முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசு வழங்குகிறார். இது தவிர கலப்பட பொருள்களுக்கு எதிராக போராட்டத்தை அவரது ரசிகர்கள் முன்னெடுத்து செல்ல இருக்கின்றனர்.