டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு திரையின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகவிருக்கும் கபார் சிங் 2 படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதம் 29 ஆம் தேதியிலிருந்து துவங்க உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்புகள் புனேவில் நடைபெறவுள்ளன. இதற்காக நடிகர் பவன் கல்யாண் புனே புறப்பட்டு சென்றுள்ளார். இயக்குநர் பாபி இயக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அனிஷா அம்ரோஸ் நடிக்க .உள்ளார். நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். புனேவில் துவங்கும் இப்படத்தின் முதல்கட்ட படபிடிப்புகள் தொடர்ந்து ஜூன் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கபார் சிங் 2 படம் 2016 சங்கராந்தி பண்டிகைக்கு வெளிவரும் வகையில் திட்டமிடப்பட்டு வருகின்றது.