விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
பாடலாசிரியராக இருந்து நடிகராகவும் மாறியவர் கவிஞர் பா.விஜய். ஞாபகங்கள், இளைஞன் என இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தார். இரண்டுமே படு தோல்வியடைந்த நிலையில் தற்போது கோடம்பாக்கத்தின் சீசனில் தன்னையும் இணைத்துக் கொண்டு பேய்ப்படத்தில் நடிக்கிறார். 'ஸ்ட்ராபெரி' என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார் பா.விஜய். இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் இப்படத்தின் பாடல் ஒன்றை நடிகர் சித்தார்த் பாடியிருக்கிறார்.
சமீபத்தில் 6 மணி நேரம் செலவழித்து நடிகர் சித்தார்த் இப்பாடலைப் பாடி இருக்கிறார். மற்றவர்கள் நடிக்கும் படங்களில் பாடுவதை சிம்பு வழக்கமாக வைத்திருக்கிறார். அவரைப்போலவே தற்போது சித்தார்த்தும் மற்றவர்கள் நடிக்கும் படத்துக்கு பாடத் தொடங்கி உள்ளார். சித்தார்த் பாடிய பாடல் உருவான விதத்தையும் தனியாகப் படம்பிடித்து மேக்கிங் வீடியோவாகவும் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் ஹிட்டானால் சித்தார்த் மேலும் பல படங்களுக்கு பாடுவார் என எதிர்பார்க்கலாம்.