டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அவளுக்கென்ன அழகிய முகம் என்ற படத்தில் 8 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். கதிரவன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.கதிரவன் தயாரிக்கும் இந்தப் படத்தை கேசவன் இயக்குகிறார். பூவரசன், விக்கி ஆதித்யா, விஜய் கார்த்திக், சபரி ஆகியோர் ஹீரோக்களாகவும், அனுபமா, சத்யா, ரூபாஸ்ரீ, நிவிஷா ஆகியோர் ஹீரோயின்களாகவும் அறிமுகமாகிறார்கள். டேவிட் ஷார்ன் இசை அமைத்துள்ளார்.
படத்தில் நான்கு காதல் கதைகள் இருக்கிறது. அதனால்தான் நான்கு இளம் ஜோடிகளை அதாவது நான்கு ஹீரோ, நான்கு ஹீரோயின்களை அறிமுகப்படுத்துகிறோம். மூன்று ஜோடிகளின் காதல் தோற்று விடுகிறது. அந்த மூன்று ஜோடிகளும் இணைந்து தங்கள் காதல் தோற்றது ஏன் என்ற அனுபவத்தை கொண்டு நான்காவது காதல் ஜோடியை சேர்த்து வைக்கிற கதை. எல்லோருமே புதுமுகங்கள் என்பதால் அவரவர் ஜோடிகளுடன் அவர்களை சுதந்திரமாக பழகவிட்டு அவர்களுக்குள் காதல் கெமிஸ்ட்ரி உருவான உடன் படப்பிடிப்பு நடத்தினோம். தற்போது அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. விரைவில் வெளிவருகிறது என்றார் இயக்குனர் கேசவன்.