'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'தூங்காவனம்' படத்தின் முதல் பார்வையை இன்று கமல்ஹாசன் ஹைதராபாத்தில் வெளியிட்டார். இந்தப் படம் தெலுங்கில் 'சீகட்டி ராஜ்ஜியம்' என்ற பெயரிலும் தனியாக எடுக்கப்படுகிறது. இன்று வெளியிடப்பட்ட மூன்று முதல் பார்வை போஸ்டர்களில் கமல்ஹாசன் மட்டுமே இடம் பெற்றிருந்தார். அதைப் பார்த்ததும் த்ரிஷா கமலிடம் ஏன் என்னுடைய போட்டோ இடம் பெறவில்லை என சண்டை போட்டாராம். இதை கமல்ஹாசனே பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“கமல் சாரிடமிருந்து எனக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரம் இந்தப் படம். இந்த வரத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தர முயற்சிப்பேன். 2008ம் ஆண்டில் அவரிடம் மூன்றாவது உதவி இயக்குனராகச் சேர்ந்தேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இப்போது ஒரு பரீட்சை ஹாலுக்குள் சென்றது போன்று உணர்கிறேன்,” என இயக்குனர் ராஜேஷ் எம்.சிவா தெரிவித்தார்.
“கமல் சாருடன் இரண்டாவது முறை இணைந்து நடிப்பது மிக்க மகிழ்ச்சி. தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் இதற்கு முன் கண்டிப்பாக பண்ணதில்லை. பிரகாஷ்ராஜ் சாருடன் என்னுடைய முதல் தெலுங்குப் படத்தில் நடித்தேன். மீண்டும் அவருடன் நடிப்பதும் மகிழ்ச்சி,” என த்ரிஷா பேசினார்.