‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த விமர்சகர்கள் விருதை, இந்திய படமான மாஸான் வென்றுள்ளது. இதன்மூலம், இந்த திரைப்பட விழாவில், விருதுவாங்கிய ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையை மாஸான் படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் நீரஜ் கெய்வான் இயக்கிய முதல் படம் இது ஆகும். தனது முதல் படத்திற்கே அங்கீகாரம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நீரஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளிப்படுத்தியுள்ளார். நான்கு சிறிய நகரங்களுக்கு இடையேயான பயணத்தை கதையாகக் கொண்ட இந்தப் படத்தில் விக்கி கவுசால், ரிச்சா சந்தான் மற்றும் ஸ்வேதா திரிபாசு ஆகியோர் நடித்துள்ளனர். பார்வையாளர்களின் பலத்த கரகோசங்களுக்கு இடையே விமர்சன விருதை (எப்.ஐ.பி.ஆர்.இ.எஸ்.சி.) வென்றுள்ள இந்த படம் படத்தை எடுத்தவர்களுக்கும் அதில் நடித்தவர்களுக்கும் அடுத்தடுத்த சிறந்த படங்களை எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது என்று நீரஜ் கெய்வான் அதில் குறிப்பிட்டுள்ளார்.