இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணீதா மற்றும் பலர் நடிக்கும் 'மாஸ்' படத்தின் பெயர் கடந்த வியாழக்கிழமை வரைதான் 'மாஸ்' என்று இருந்தது. வெள்ளிக்கிழமை முதல் 'மாஸ் என்கிற மாசிலாமணி' என பெயரை மாற்றினார்கள். அந்தப் பெயரும் நேற்று வரை மட்டுமே இருந்தது. இன்று முதல் அந்தப் பெயரில் மேலும் ஒரு மாற்றத்தைச் செய்திருக்கிறார்கள்.
அதாவது 'மாஸ் என்கிற மாசிலாமணி' என்பது 'மாஸு என்கிற மாசிலாமணி' என மாறியிருக்கிறது. 'மாசிலாமணி' என்பதன் சுருக்கம்தான் 'மாஸ்' என்று சொன்னால் வரிவிலக்குக் குழுவினர் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமாக இருக்கும் என நினைத்து இன்று முதல் 'மாஸு என்கிற மாசிலாமணி' ஆக மாற்றியிருக்கிறார்கள். இன்றைய விளம்பரங்களில் 'மாஸு' என்றுதான் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் அதில் 'ஸு' என்பதை உற்று கவனித்தால்தான் கண்களுக்குத் தெரியும். டிசைனில் அந்த 'ஸு' என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாதவாறு டிசைன் செய்திருக்கிறார்கள்.