ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் 98வது படமான லயன் அண்மையில் திரைக்கு வந்து வசூல் சாதனையோடு வெற்றி நடை போட்டு வருகின்றது. அப்படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணா, இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் டிக்டேட்டர் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்தது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் பாலகிருஷ்ணா கூறுகையில், ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் தனது 99வது படத்தை இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்குவதாகவும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட இப்படம் ரசிகர்களைக் கவரும் வகையில் அமையும் என்றும் தெரிவித்தார். இப்படத்தின் முதல்கட்ட வேலைகள் மே 29 ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை அஞ்சலி இப்படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தமன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றவிருக்கும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.