Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஜோடி சீசன் 8-ல் கார்த்திகா நாயர்!

24 மே, 2015 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Karthika-Nair-in-Vijay-TVs-new-programme

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்து வருபவர்களில் மாஜி ஹீரோயினி ராதாவும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் நீண்டகாலமாக பங்கேற்று வரும் அவர், நிகழ்ச்சியில் ஆடும் நபர்களின் நடனத்திற்கு மதிப்பெண் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நல்ல கமெண்டுகளும் கொடுத்து வருகிறார்.


இந்த நிலையில், நேற்றைய தினம் ஜோடி சீசன்- 8 நிகழ்ச்சியில் ராதா பங்கேற்றபோது அவரது மகளான நடிகை கார்த்திகா நாயரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கமெண்டுகளை கொடுத்தார். அப்போது, சில நடன டீம் அற்புதமாக நடனமாடியபோது அவர்களை வியப்புடன் பாராட்டிய கார்த்திகா, முத்தங்களையும் பறக்க விட்டு அவர்களை திக்குமுக்காட வைத்தார்.


குறிப்பாக, மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன -என்ற தில்லானா மோகனாம்பாள் பட பாடலில் ஒரு பெண் நடனமாடியபோது, இந்த மாதிரி என்னையும் மேடைகளில் நடனமாட வைக்க என் அம்மா ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும், இப்போது நீங்கள் ஆடியதை நான் ஆடியது போலவே பீல் பண்ணினேன் என்று தனது மனநிறைவான கமெண்டினை கொடுத்து அந்த போட்டியாளரை உற்சாகப்படுத்தினார் கார்த்திகா நாயர்.


பின்னர், கெஸ்ட் ஆடும் நேரம் வரும்போது, ஜட்ஜ் இருக்கையில் இருந்து எழுந்து மேடைக்கு சென்று நடன கலைஞர்களுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி படத்தின் பாடலுக்கு நடனமாடினார் கார்த்திகா. ஆரம்பத்தில் பயிற்சி எடுக்காமல் வந்து விட்டவரைப்போன்று ஆடத்தொடங்கியவர், பின்னர் தன்னுடன் சேர்ந்து ஆடியவர்களைப்பார்த்து பிக்கப் பண்ணிக்கொண்டு சிறப்பாக ஆடினார் கார்த்திகா நாயர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in