ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நயன்தாரா நடித்திருக்கும் படம் - மாஸ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும், டீஸரும் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகமெங்கும்வரும் 29 ஆம் தேதி வெளியாக உள்ள மாஸ் படத்தின் பெயர் தற்போது மாஸ் என்கிற மாசிலாமணி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்தை சுமார் 450 தியேட்டர்களில் வெளியிட உள்ளனர். சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட மாஸ் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தது. குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் பார்க்கும் வகையில் இருப்பதால் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தணிக்கைக்குழுவினர் தெரிவித்ததனராம். பொதுவாக மாஸ் போன்ற பேய்ப் படங்களுக்கு ஏ அல்லது யு/ஏ சான்றிதழ்தான் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, மாஸ் படத்துக்கு அனைத்து தரப்பினரும் பார்க்கத்தக்க வகையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாஸ் பேய்ப்படம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் சென்ட்டிமென்ட் படம் என்கிறார்கள். இந்தப் படத்தில் அப்பா - மகன் என சூர்யாவுக்கு இரண்டடை வேடம்.
அப்பா இறந்துவிடுகிறார். மகன் சூர்யாவுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும்போது, இறந்து ஆவியாக உள்ள அப்பா சூர்யா மகனுக்கு உதவிகளை செய்கிறார். ஆவியாக இருந்தாலும் அப்பா சூர்யாவின் கெட்டப்பும் வழக்கம்போல் ஹேன்ட்ஸம்மாகவே இருப்பதுபோல் அந்த கேரட்கரை வடிவமைத்திருக்கிறார்கள்.