ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனுஷ் நாயகனாக நடித்த '3' படத்தில் அவருடைய நண்பராக நடித்தார் சிவகார்த்திகேயன். நிழல் நண்பனாக நடித்தவர் அப்படியே நிஜ நண்பனாகவும் நெருக்கமான நண்பனாகவும் மாறினார். அதன் பின் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க 'எதிர் நீச்சல், காக்கி சட்டை' ஆகிய படங்களை தனுஷே தயாரித்தார். இடையில் சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் சண்டை என அதிகமாகவே செய்திகள் கிளம்பின. ஒரு கட்டத்தில் இருவருமே அப்படியெல்லாம் எதுவுமில்லை, நாங்கள் நல்ல நண்பர்கள்தான் என்று சொல்லுமளவிற்கு ஆகிப் போனது.
இப்போது சிவகார்த்திகேயனும் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துவிட்டார். சிவகார்த்திகேயன் இப்போது நடித்து முடித்துள்ள 'ரஜினி முருகன்' படத்தின் இசை வெளியீட்டை அடுத்த மாதம் 7ம் தேதி நடத்தப் போவதாக எப்போதோ அறிவித்தார்கள். நேற்றுதான் அந்த இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடக்கும் என தெரிவித்துள்ளார்கள். இதனிடையே தனுஷ் தற்போது நடித்துள்ள 'மாரி' படத்தின் இசை வெளியீட்டையும் ஜுன் 7ம் தேதி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
'ரஜினி முருகன்' இசை வெளியீட்டுத் தேதி எப்போதோ அறிவிக்கப்பட்ட ஒன்று. ஆனால், நேற்று திடீரென 'மாரி' படத்தின் இசை வெளியீட்டையும் அதே தேதியில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது தற்செயலான விஷயமல்ல. இதனால், சிவகார்த்திகேயனுக்குப் போட்டியாக தனுஷ் களமிறங்குகிறாரே என கோலிவுட்டில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.