தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
''உத்தம வில்லன்'' படத்தின் ரிலீஸ்க்கு பிறகு கமல் நடிப்பில் ''பாபநாசம்'', ''விஸ்வரூபம்-2'' என இரண்டு படங்கள் ரிலீஸூக்கு தயாராகியுள்ளன. இந்த சூழலில் தனது அடுத்தப்பட வேலைகளில் கமல் இறங்கிவிட்டார். கமலின் அடுத்தபடம் ''தூங்கா வனம்''. இதை கமலே சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இப்படத்தில் கமல் உடன் த்ரிஷா, மனீஷா கொய்ராலா, பிரகாஷ் ராஜ், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர். கமலிடம் உதவியாளராக இருந்த ராஜேஷ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் ஐதராபாத்தில் துவங்குகிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகும் இப்படம், ஆக்ஷ்ன் கம் த்ரில்லராக உருவாக இருக்கிறது. படத்தை துவங்குவதற்கு முன்பாக தூங்காவனம் படத்தின் பர்ஸ்ட் லுக் வௌியிட முடிவு செய்துள்ளார் கமல். அதன்படி இப்படத்திற்கான போட்டோ ஷூட் சென்னையில் நேற்று நடந்தது. தற்போது பர்ஸ்ட் லுக்குக்கான டிசைனிங் வேலைகள் நடந்து வருகிறது. மே 25ம் தேதி தூங்காவனம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வௌியிட்டு, அதன் பின்னர் தனது படப்பிடிப்பையும் துவங்க இருக்கிறார் கமல்.