ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
கந்தர்வா செல்லுலாய்ட் கிரியேட்டர்ஸ் உடன் ராஜ் அஸோஸியேட்ஸ், கதிர் பிலிம்ஸ் ஆகிய திரைப்பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய தமிழ் திரைப்படம் "ஒரு தோழன் ஒரு தோழி". "நல்ல தோழன் தந்தைக்கு சமமாகிறான், நல்ல தோழி தாய்க்கு சமமாகிறாள்" என்ற அழகிய கருத்தினை கொண்டு, எளிய மனிதர்களின் எதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளது.
பஞ்சாலையில் வேலை பார்க்கும் இரு நண்பர்களின் வாழ்க்கைக்குள் ஒரு பெண் வருகிறாள். நட்பு, காதல், சண்டை எனப்போகும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு உயர்வான நிலையை அடையும் சூழ்நிலை வருகிறது. அப்போது ஏற்படும் ஒரு அசம்பாவிதம் அவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றிபோடுகிறது என்பதனை "நட்பு என்றும் சொர்க்கத்தில் வாழாத மனிதர்களே இல்லை" என்ற உயர்ந்த உணர்வோடும் சொல்லும் கதை இது என்கிறார் இயக்குநர் மோகன்.
இப்படத்தின் கதை நாயகர்களாக மீனோஷ் கிருஷ்ணா, மனோதீபன் மற்றும் கதாநாயகியாக அஸ்தரா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இவர்களோடு அபிநிதா, "ஹலோ" கந்தசாமி, குமார், மகாதாரா, அருணாச்சலமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இராஜபாளையம், மதுரை யானைமலை ஒத்தகடை, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களிலும் படமாக்கப்பட்டது. இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையில் படத்தின் ஏழுபாடல்களும் இதயத்தில் நட்பு பாராட்டுகின்றன. இத்திரைப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.