Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமரகட்டு, டிமான்ட்டி காலனி - ஒரே நாளில் இரண்டு பேய்ப் படங்கள்!

22 மே, 2015 - 14:28 IST
எழுத்தின் அளவு:
Kamarakattu---De-Monte-colony---horror-movies

கடந்த வருடம் ஏகப்பட்ட பேய்ப்படங்கள் வெளிவந்தன். அவற்றில் சில படங்களே வெற்றியடைந்தன. அவற்றில் முக்கியமான படங்கள் - எல்ரெட் குமார் தயாரிப்பில் டிகே இயக்கிய யாமிருக்க பயமே, சுந்தர்.சி இயக்கத்தில் சந்தானம், வினய் நடித்த அரண்மனை, மிஷ்கின் இயக்கிய பிசாசு. இந்த வருடத்தின் துவக்கத்திலேயே இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் கதாநாயகனாக அறிமுகமான டார்லிங் என்ற பேய்ப்படம் வெற்றியடைந்தது. டார்லிங் படத்தை அடுத்து ஏகப்பட்ட பேய்ப்படங்கள் வந்தாலும், கடந்த காலங்களில் வெளியான அத்தனை பேய்ப்படங்களின் வசூலையும் மிஞ்சுகிற வகையில் வெற்றிப்படமானது - காஞ்சனா-2 படம் மட்டுமே.


இப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்து வசூலில் இன்றுவரை சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் ஒரு தியேட்டரில் 4 காட்சி ஓடிய காஞ்சனா -2 படத்தை பகல்காட்சியாக மாற்றிவிட்டு 36 வயதினிலே படத்தை 3 காட்சிகளில் திரையிட்டனர். இரண்டே நாட்களில் 36 வயதினிலே பகல் காட்சியாக மாற்றப்பட்டு, காஞ்சனா-2 படம் 3 காட்சியாக மாற்றப்பட்டது. அந்தளவுக்கு பேய் ஓட்டம் ஓடும் காஞ்சனா 2 படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி.


இன்று வெளியாகி உள்ள டிமான்ட்டி காலனி படத்தையும் அவரே வாங்கி வெளியிட்டிருக்கிறார். அருள்நிதியின் மோகனா மூவிஸ் தயாரித்திருக்கும் டிமான்ட்டி காலனி படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அஜய் ஞானமுத்து என்ற புதுமுக இயக்குநர் இயக்கி இருக்கிறார். ரசிகர்களின் பல்ஸை தெரிந்து வைத்திருக்கும் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி இப்படத்தை வெளியிட்டிருப்பதை வைத்தே டிமான்ட்டி காலனி படத்தின் வெற்றி உறுதி என்கிறார்கள் தியேட்டர்காரர்கள். ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் யுவன், ஸ்ரீராம் நடித்து இன்று வெளியாகி உள்ள கமரகட்டு படமும் பேய்ப்படம்தான். படத்தின் நாயகர்களாக நடிக்கும் யுவன், ஸ்ரீராம் இருவரையும் வஞ்சகமாக ஏமாற்றி கொன்று விடுகின்றனர். காதலிகளின் உடம்புக்குள் புகுந்து கொண்டு அதாவது பெண்களின் உருவத்தில் இரண்டு ஆண் பேய்களும் என்ன செய்கின்றன என்பதுதான் கமரகட்டு படத்தின் கதை. பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் பயப்படாமல் ரசிக்கும்படி கமரகட்டு படத்தை எடுத்திருக்கிறார் ராம்கி ராமகிருஷ்ணன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in