தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையான மூணுஷா நடிகைக்கும் மணியான தயாரிப்பாளருக்கும் இடையே நடைபெற இருந்த திருமணம் நின்றது பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் சிலருக்கு கொண்டாட்டமாக இருக்கிறதாம். அவர்களிருவருக்கும் நிச்சயம் நடக்கப் போகிறது என்று சொன்னவுடனேயே லட்சுமிகரமான கிளாமர் நடிகை கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டதெல்லாம் பழங்கதை. லட்சுமிகரமான நடிகைதான் மூணுஷா நடிகையை அந்தத் தயாரிப்பாளருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் இவரை ஒதுக்கி விட்டு அவர்களிருவரும் நெருக்கமாகியிருக்கிறார்கள். கடைசியில் அது நிச்சயம் வரை சென்றதும் லட்சுமிகரமான நடிகையின் அதிர்ச்சிக்கு அளவேயில்லாமல் போய்விட்டதாம்.
இப்போது அவர்களிருவரும் திருமணத்திற்கு முன்பே பிரிந்து போனதில் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம். இதற்காக தனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். மூணுஷா, மணியான தயாரிப்பாளர் பிரிவுக்கு ஒல்லிபிச்சான் நடிகரும் ஒரு காரணம் என்கிறார்கள். குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அந்த ஒல்லிபிச்சான் நடிகருக்கு அழைப்பு விடுத்துவிட்டாராம். அந்த ஒல்லிபிச்சான் நடிகருக்கும், மணியான தயாரிப்பாளருக்கும் ஏற்கெனவே ஆகாது. அவரைக் குறிப்பிட்டுத்தான் சமீபத்தில் அவர் சொந்தமாகத் தயாரித்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தையே வைத்திருந்தார். இது கோலிவுட்டில் உள்ள எல்லாருக்கும் தெரியும்.
ஒன்று சேர்வதற்கு ஒரே ஒரு காரணம் போதும், அது காதலாக மட்டுமே இருக்கும். ஆனால் பிரிவுக்கு பல காரணங்கள்.