17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி |
வணிகநோக்கிலான படங்களில் கூட புதிய முறையில் கதை சொல்வதிலும் தொழில்நுட்ப துணையை பயன்படுத்துவதிலும் தனக்கென தன்னிச்சையான முத்திரை பதித்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். எந்த ரகத்திலான படங்களிலும் தன் பளிச் முத்திரை பதிப்பவரான அவர், இப்போது இயக்கும் படம் யட்சன்
இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை இது. இதில் ஆர்யா, கிருஷ்ணா, ஸ்வாதி, தீபா சன்னிதி நடித்துள்ளனர். கதை பற்றி இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறும்போது இது இரண்டு புறம்போக்குகளின் கதை. அவர்களுக்கிடையே உள்ள நட்பைப் பேசும். நட்பு மட்டுமல்ல படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி போல பல அம்சங்களும் இருக்கும்.
ஐந்தாவது முறையாக ஆர்யாவை நாயகனாக்கி எடுத்துள்ள படம் யட்சன். ஆர்யாவை வைத்துப் படம் ஆரம்பிக்கும் போது உள்ள புத்துணர்வு முடிக்கும் போதும் இருக்கும். முடித்தவுடன் அப்பாடா. முடிந்ததா என்று தோன்றாது. அந்தளவுக்கு புத்துணர்ச்சியை உணர வைப்பது அவரது ஸ்பெஷல். அடுத்த படம் எப்போது என்று அவரே கேட்பார் அந்தளவுக்கு எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. முதன் முதலில் என் தம்பி கிருஷ்ணாவை, வைத்து இயக்கியதும் மறக்க முடியாத மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
இறுதிக்கட்டப் பணிகளில் மெருகேறிவரும் இப்படம் விரைவில் வெளிவர வுள்ளது. விஷ்ணுவர்தனின் எல்லாப் படங்களுக்குமே யுவன் சங்கர்ராஜாதான் இசை. அந்தளவுக்கு பின்னிப் பிணைந்த கூட்டுறவுள்ளவர்கள் அவர்கள். இப்படத்திலும் யுவன் இசை யமைத்துள்ளார். 5 பாடல்கள்உள்ளன. அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை விஷ்ணு வர்தன் பிக்சர்ஸுடன் யுடிவியும் இணைந்து தயாரிக்கிறது.