‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சிறுவர்களை மையப்படுத்திய படங்கள் தமிழ் சினிமாவில் வருவது அபூர்வமான ஒன்று. அப்படி ஒரு அபூர்வமும், அசத்தலும் நிறை படம் தான் காக்கா முட்டை. படம் வெளியாகும் முன்பே டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா, ரோம் திரைப்பட விழா, துபாய் சர்வதேச திரைப்பட விழா, பிரிஸ்பேன் ஏசியா பசிபிக் திரைப்பட விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா, கோல்ட் கோஸ்ட் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு திரையிடப்பட்டு பல விருதுகளையும் பெற்றுள்ளது. 2014ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. அதோடு படத்தில் நடித்துள்ள ரமேஷ், விக்னேஷ் இருவரும் 2014ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு ஏழை சிறுவர்களை மையப்படுத்தி ஒரு யதார்த்தமான பதிவை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநரான மணிகண்டன். வெற்றிமாறனும், தனுஷூம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் இப்படத்தை தயாரித்த ஒரு தயாரிப்பாளராக தனுஷ் பேசியதாவது, காக்கா முட்டை படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. இந்தப்படத்தை தயாரித்ததால் எனக்கு பெருமையும் கூட. மணிகண்டன் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீறி அதிகமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார். மணிகண்டன் இன்னும் தரமான படங்களை தருவார் என்று நம்புகிறேன். வெற்றிமாறன் நிறைய படங்களை எடுக்க சொல்லி கதை கொண்டு வருவார். அவரது கணிப்பு எப்போதும் சரியாகத்தான் இருக்கும். அதனாலேயே காக்கா முட்டை படத்தை தயாரித்தேன்.
நானும், எனது அண்ணனும் வாழ்ந்த வாழ்க்கை தான் காக்கா முட்டை படம். எங்களது லைப் ஸ்டைல், வசித்த இடம் உள்ளிட்ட உணர்வுகளை இந்தப்படம் கொடுத்தது. படம் வெளிவரும் முன்பே அதிக லாபத்தை கொடுத்திருக்கிறது காக்கா முட்டை படம். நான் கஷ்டப்பட்டு நடித்து தேசிய விருது வாங்கினேன். ஆனால் இந்தப்படத்தில் நடித்த குழந்தைகள் அசால்ட்டாக நடித்து விருது வாங்கியுள்ளனர். அவர்களை பார்க்கும் போது நானே கொஞ்சம் வெட்கப்படுகிறேன். இப்படியெல்லாம் கூட நடிக்க முடியும் என்று அவர்களிடம் சில விஷயங்களை கற்று கொண்டேன்.
ஐஸ்வர்யா ராஜேஷ், அம்மா ரோலில் நடிக்க ரொம்ப தைரியம் வேண்டும் என்று எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் அவர் எடுத்த முடிவும் மிகவும் சரியானது தான். நான் வறுமை, இன்ப வாழ்க்கை இரண்டையும் அனுபவதித்துள்ளேன். இந்தப்படம் குடும்பத்தோடு எல்லோரும் பார்க்கும் ஒரு படமாக இருக்கும் என்றவர், இப்படத்தில் நடித்த அனைத்து குழந்தைகளின் முழு கல்வி செலவையும் நானே ஏற்கிறேன். அவர்கள் என்ன படிக்க நினைக்கிறார்களோ அதை படிக்கலாம். நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் கூட அதற்கும் நான் உதவுவேன்.
இவ்வாறு தனுஷ் பேசினார்.
விழாவில் இயக்குநர் மணிகண்டன், வெற்றிமாறன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.