மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஒவ்வொரு படங்களுமே சோதனை முயற்சியான படங்கள்தான். அதில் சில படங்கள் சாதனைப் படங்களாக அமைகின்றன. சில படங்கள் சோதிக்கும் படங்களாக அமைந்து விடுகின்றன. தனது ஒவ்வொரு படத்திலும் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்ல கமல்ஹாசன் முயற்சிக்கிறார். ஆனால், அவை கமர்ஷியலாக சில சமயங்களில் பெரிய வெற்றியைப் பெறாமலே போய் விடுகிறது.
'உத்தம வில்லன்' படத்தைப் பொறுத்தவரையில் அற்புதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கமல்ஹாசனின் நடிப்பை ரசிகர்களும் பாராட்டித் தள்ளி வருகிறார்கள். ஆனாலும், எதிர்பார்த்த அளவிற்கு அபரிமிதமான வசூல் இல்லை என கோலிவுட்டில் சொல்கிறார்கள். படத்தை சொன்னபடி மே 1ம் தேதி கொண்டு வந்திருந்தால் பெரிய வசூல் கிடைத்திருக்கும் என்கிறார்கள். இருந்தாலும் வெளிநாடுகளில் இப்படம் அமோக வசூலை அள்ளி வருகிறது.
இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், “என்னுடைய அப்பா எப்போதுமே சோதனை முயற்சிகளிலிருந்து பின் வாங்க மாட்டார். வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதானிருப்பார்,” எனக் கூறியிருக்கிறார்.
சோதனைகளெல்லாம் சரி, அதே சமயம் அவற்றை விட சாதனைகள் அதிகம் வரும்படி கமல்ஹாசன் படங்களைக் கொடுத்தார் அவர் படங்களின் வியாபாரமும் புதுப்புது சாதனைகளை படைக்கும்.